------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

May 2, 2013

"இலவசமாக உணவு கிடைக்காது" - There is no free Food








ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் பிறந்த நாளையட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர்.

ராஜா அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார்:-

அறிஞர் பெருமக்களே!

உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும் இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம்? ஒரு சாமான்ய மனிதனுக்குக் கூடப் புரியும்படி உங்கள் அறிவின் மூலம் ஏதேனும் சொல்ல வேண்டும்"

அறிஞர்கள் கூடி தங்களுக்குள் விவாதித்து, பின்னர் ராஜாவிடம்,

" ஏற்கனவே முன்னால் இருந்த அறிஞர்கள் கூறியதை விட புதிதாக சொல்ல ஒன்றும் இல்லை" என்று கருத்துத் தெரிவித்தனர்.

மனம் மிக மகிழ்ந்த ராஜா, "அப்படியா! அந்த அறிஞர்கள் கூறியதை எல்லாம் எளிய மொழியில் அப்படியே தொகுத்துக் காண்பியுங்கள்' என்றார்.

அறிஞர்கள் மீண்டும் கூடினர். ஒருவாறாக ஆராய்ந்து அனைத்துக் கருத்துக்களையும் தொகுத்தனர்.

ராஜாவை அணுகிய அறிஞர்கள் குழு பெருமிதத்துடன் ,

"அரச பெருமானே! அனைத்தையும் தொகுத்து விட்டோம். இதோ பாருங்கள்"என்று கூறி தொகுப்பை நூறு நூல்களாக ஆக்கிக் கொடுத்தனர்.

ராஜா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இருந்த போதிலும் அவர் அறிஞர்களை நோக்கி, "உங்கள் திறமையைக் கண்டு வியக்கிறேன்.

என்றாலும் சாமான்யமான ஒருவனை நோக்கி நூறு நூல்களைப் படி என்றால் அவனால் அது எப்படி முடியும்? ஆகவே இந்த நூறு நூல்களைச் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

அறிஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு நூறு நூல்களின் சாரத்தை ஒரே நூலாக ஆக்கி ராஜாவிடம் சமர்ப்பித்தனர்.

மகிழ்ந்து போன ராஜா மீண்டும் அறிஞர்களைப் பாராட்டினார்.

"ஆனால் அறிஞர் பெருமக்களே! இந்த ஒரு நூலையும் கூடப் படிக்க முடியாத படி ஏழை மக்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் அல்லவா! இதை இன்னும் சுருக்கிக் கொண்டு வாருங்கள்" என்றார்.

அறிஞர்கள் ஓயாது விவாதித்து இறுதியாக ஒரு பக்கத்தில் அனைத்தையும் சுருக்கிக் கொண்டு வந்து ராஜாவிடம் சமர்ப்பித்தனர்.

அதைப் படித்துப் பார்த்த ராஜா," ஆஹா, மிக மிக அற்புதம். என்றாலும் ஒரு சிறு குறை எனக்கு இருக்கிறது. இந்த ஒரு பக்கமும் கூடச் சற்று அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. இதை ஒரே வரியில் சுருக்க வேண்டுமே. உங்களால் முடியாதது ஒன்று உண்டா, என்ன?"

அறிஞர்கள் குழு தீவிரமாக விவாதித்தது. இறுதியில் அறிஞர்கள் தங்கள் முடிவை ராஜாவிடம் ஒரு சிறிய ஓலை நறுக்கில் எழுதித் தந்தனர்.

அதைப் படித்துப் பார்த்த ராஜா துள்ளிக் குதித்தார். "இதை.. இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்.

எல்லாவற்றையும் கரைத்துக் குடித்த நீங்கள் சாரத்தை வடித்துத் தந்து விட்டீர்களே!

இதை சாமான்யனும் புரிந்து கொள்வான்" என்று மகிந்து கூறி அந்த வாசகத்தை அறிஞர்களின் வாசகமாகத் தன் தேசமெங்கும் பறையறிவித்தான்.

அந்த வாசகம் என்ன தெரியுமா?


"இலவசமாக உணவு கிடைக்காது" (There is no free Food)



திசைக்காலஜிஸ்ட்உளவியல் ஆலோசனை மையம்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
பாண்டிச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)

97869 01830
திசைக்காலஜிஸ்ட்உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்








==--==

Contact Form

Name

Email *

Message *