------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

May 15, 2014

Counseling for Elders - Aged Peoples in Velachery, Chennai, Tamil nadu, - முதியவர்களுக்கான உளவியல் ஆலோசனை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ்நாடு,



 முதியோரின் நடவடிக்கை மற்றும் மனநிலையில் ஏற்படும் பிரச்னைகள்.  முதியோரின் வயது அதிகரிப்பதால் ஏற்படும் உடல்நிலை மாற்றம், உணர்ச்சிகள் மாற்றம், சமூக சூழல் மாற்றம் போன்றவை அவர்களுக்கு உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்  முதியோருக்கு ஏற்படும் பொதுவான உளவியல் பிரச்சனைகள்  மனச்சோர்வு மனச்சோர்வு என்பது ஒரு உணர்வுபூர்வமான மன நிலை பாதிப்பு. இதை வருத்தம், வெறுப்புற்ற மனநிலை, நம்பிக்கையிழந்த நிலை ஆகியவற்றின் மூலம் ஒரு முதியவர் வெளிப்படுத்தலாம்.   பொதுவாக முதியோர்களிடம் மனச்சோர்வும் தற்கொலை மனப்பான்மையும் அதிகளவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம், முதியோரின் வாழ்நாளின் பிற்பகுதியில் ஏற்படும் கடுமையான இழப்பே ஆகும்.   உதாரணமாக,  • உடல்நலம் குன்றுதல்,  • உடல்நிலையில் மாற்றம்,  • பணி ஓய்வுக்குப் பின் ஏற்படும் வருமான இழப்பு,  • உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழத்தல்,  • வாழ்க்கைத் துணைவரை இழந்துவிடுதல்,  • மகன் / மகள் களை விட்டு தனியே இருத்தல், • மருமகள் / மருமகன் பிரச்சனை, • பெருளாதார பிரச்சனை, • தற்காலிக இடமாற்றம்   போன்றவற்றைச் சொல்லாம்.  முதியோருக்கு ஏற்படும் மனச்சோர்வை குடும்பத்தினர் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். முதுமையில் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.   ஆரம்ப நிலையிலேயே முதியோருக்கு ஏற்படும் மனச்சோர்வை கண்டுபிடித்து, உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். தவறினால் தேவையற்ற சிரமங்கள் ஏற்பட நேரிடும்.  மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்,  • தீயது ஏதோ நடக்கப்போகிறது என்ற பயம்,  • எப்போதும் சோகமாகக் காணப்படுதல்,  • உற்சாகமின்மை  • ஒன்றில் கவனம் செலுத்த இயலாமை,  • சோம்பேறித்தனம்,  • எதிலும் ஆர்வமின்மை,  • குற்றவுணர்வு,  • ஒழுங்கற்ற பசி மற்றும் தூக்கம், • வழக்கத்துக்கு மாறான மன உளைச்சல், • உடல் கோளாறுகள்  ஆகியவற்றை மனச்சோர்வின் பொதுவான அறிகுறிகளாகக் கூறலாம்.  மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட முதியோர், சிறிய விஷயத்திற்கும் அதீதமாகக் கவலைப்படுவார்கள்; தொடர்ந்து உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாகக் கூறுவார்கள்; சில சமயம், மனச்சோர்வு ஞாபகச் சக்தியை குறைத்துவிடும்  மனக்கலக்கம். ஒருவரின் நடவடிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம், எதிர்ப்புணர்வு, கவனமின்மை, ஞாபகச்கக்திக் குறைவு, ஒழுங்கற்ற சிந்தனை ஆகியவற்றை மனக்கலக்கம் அல்லது பித்து பிடித்த நிலை என்று கூறலாம்.   இந்த நிலை, ஒரு நாளின் பொழுதில் மாறிக்கொண்டே இருக்கும். பாதிக்கப்பட்டவர் ஏதோ குழப்ப நிலையில் இருப்பதாக குடும்பத்தினர் நினைப்பார்கள்.   உதாரணத்திற்கு சுதந்திரமாகவும், நல்ல உடல் நலத்தோடும் இருப்பவர் திடீரென்று குழம்பியவராகவும் அமைதியற்றும் காணப்படுவார். சிறிது நேரத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். மீண்டும் பழைய நிலைக்குப் போய்விடுவார். சில சமயம் அரை மயக்கத்தில் இருப்பார். தூங்கும் வழக்கத்தில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கமின்றித் தவித்துவிட்டுப் பகலில் தூங்குவார். ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால், பித்து நிலையில் இருப்பவரின் நடவடிக்கையில் தாறுமாறான மாற்றங்கள் இருக்கும். இந்த மனக்கலக்கம் நிலைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடி கவனம் செலுத்தாவிட்டால், அதுவே நிறைய உடல்நலக் கோளாறுகள் வருவதற்குக் காரணமாகிவிடும். இதற்குக் காரணமாக நோய்த் தொற்று, பக்கவாதம், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றைச் சொல்லலாம்.   வேறு நோயைக் குணப்படுத்தச் சாப்பிடும் மருந்துகளின் பின்விளைவாகவும் பித்துநிலை முதியோருக்கு ஏற்படலாம்.   முதல் முறையாகப் பித்து நிலையால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயின் தன்மை சரியாகக் கண்டுபிடித்து சரியான சிகிச்சைக்குப் பிறகு பூரணமாகக் குணமாகிவிடுகிறார்கள். அப்படி உரிய சிகிச்சை அளிக்காத பட்சத்தில், அதுவே டிமென்ஷியா அல்லது இறப்புக்கோ வழிவகுத்துவிடும்.  டிமென்ஷியா ஒருவர் தன் இயல்பான செயல்களைச் செய்ய முடியாத அளவுக்குச் மூளைத் திறனை இழந்துவிடும் நிலை 'டிமென்ஷியா' என்று அழைக்கப்படுகிறது.   மனக்கலக்கம் நிலையைப் போல் அல்லாமல், டிமென்ஷியாவின் பாதிப்புகள் ஒருவரிடம் கொஞ்சம் கொஞ்சம் ஏற்படுகிறது.   மூளை செயல்பாட்டுத் திறனை இழப்பதால் ஞாபகச்சக்தி, தெளிவான சிந்தனை, தீர்வு காணும் திறன், கணிக்கும் திறன், படிக்கும் மற்றும் எழுதும் திறன் பேச்சு ஆகியவற்றில் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட முதியவருக்குக் குறைந்த ஞாபகச்சக்தியே இருக்கும்; சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி கூட நினைவில் இருக்காது; பேசும்போது தகுந்த சொற்கள் கிடைக்காமல் திண்டாடுவார்கள்; பழக்கமான இடத்திற்கு கூட வழி கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும்.  முதியவர்களுக்கு டிமென்ஷியா முற்றத்தொடங்கினால், அன்றாட செயல்களான சாப்பிடுதல், உடை உடுத்துதல், காலைக்கடன்கள் முடித்தல், குளித்தல் போன்றவற்றைச் செய்வதற்குக் கூட மற்றவர்களின் உதவி தேவைப்படும்.   பெரும்பாலானவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் அதிகம் இருக்காது. அப்படியே இருந்தாலும், அது திசைதெரியாமல் சுற்றுதல், சமூக பழக்கவழக்கத்தல் மாறுதல், மனநிலையில் திடீர் மாற்றம் போன்றவைகளாக இருக்கும்.  டிமென்ஸியாவின் முக்கிய இரண்டு வகைகளாக அல்சீமர் நோய், வாஸ்குலர் டிமென்ஷியா ஆகியவற்றை குறிப்பிடலாம்.   அல்சீமர் நோய் உள்ளவர்களின் மூளைச் செல்கள் விரைவாக சோர்வடைந்துவிடுவதால், மூளையின் செயல்பாடு மற்றும் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.   வாஸ்குலார் டிமெனிஷியா, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதாலோ அல்லது மூளையின் நரம்புகள் பாதிக்கப்படுவதாலோ  ஏற்படுகிறது. இந்த நோய் வந்தவர்களுக்குப் பெரும்பாலும் சர்க்கரை நோயோ அல்லது உயர் இரத்த அழுத்தமோ இருப்பது பின்னால்தான் தெரியவரும். இவையே வாஸ்குலார் டிமென்ஷியா வரக் காரணமாக அமைந்துவிடுகின்றன.  மேலே குறிப்பிட்ட காரணங்களைத் தவிர வேறு காரணங்களாலும் டிமென்ஷியா வரலாம். நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்; மூளையை ஸ்கேன் செய்யும் சோதனையும் அவசியம் செய்ய வேண்டும்.  சிந்தனைத் திறனில் ஏற்படும் பாதிப்பு,  சிந்திக்கும் திறன் பாதிக்கப்படும்போது, தர்க்கரீதியாக யோசிப்பதும் உண்மையை புரிந்துகொள்வதும் பாதிக்கப்படுகிறது. • மாயத்தோற்றம்,  • பொய்யானவற்றை நம்புவது,  • கூர்ந்து ஆராயும் திறனை இழந்துவிடுவது  • கண்ணுக்கு முன் இல்லாத ஒன்று, இருப்பது போன்ற பிரமை (மாயத்தோற்றம்),  • எந்த ஒலியும் உண்மையில் ஒலிக்காதபோது ஏதோ சப்தம் கேட்பதாக ஒருவர் நினைப்பது,  • உடம்பில் ஏதோ பூச்சி ஊர்வதாக ஒருவர் நம்புவது  ஆகியவற்றை மனநலக் கோளாறுகளுக்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம்.   ஒருவர் படித்தவராகவும் பக்தியுடையவராகவும் இருந்தும் அதற்கு நேர்மாறான கருத்துகளை கூறத் தொடங்கினால் 'பொய்யானவற்றை நம்பும்' கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது பொருள். இப்படிப்பட்டவர் தன் மனைவி தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதாகவும், தனக்கு ஏதேதோ நோய் இருப்பதாகவும், தன்னை ஏதோ ஆபத்து துரத்துவதாகவும் கூறுவார்.  உளவியல் சிகிச்சைகள் & ஆலோசனைகள். முதியோருக்கு ஏற்படும் பல மனநல பிரச்சனைகளை. உரிய நேரத்தில் உளவியல் சிகிச்சை ஆலோசனை அளிப்பதன் மூலம் நோயாளியின் மன அழுத்ததைக் குறைத்து, வாழ்க்கை நிலையை மேம்படுத்தலாம். • தனிப்பட்ட உளவியல் சிகிச்சை • குடும்ப ஆலோசனை • மருத்துவம் • திறமையை மேம்படுத்துதல் • புலன்களைத் தூண்டிச் செயல்படவைத்தல் • அமைதிக்கான மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை போன்று திட்டமிட்ட உளவியல் சிகிச்சையும் தேவைப்படும்போது பக்கவிளைவுகள், பாதிப்புகள் இல்லாத அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையும் நல்ல பலனளிக்கும்.     உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும் உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   உளவியல் / மனநல ஆலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com   மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க. விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830  பண்ருட்டி:- 9443054168  புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com   முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.  முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது முதியவருக்கான ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 58 – 99******00 – மன அழுத்தம் – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.




முதியோரின் நடவடிக்கை மற்றும் மனநிலையில் ஏற்படும் பிரச்னைகள்.

முதியோரின் வயது அதிகரிப்பதால் ஏற்படும் உடல்நிலை மாற்றம், உணர்ச்சிகள் மாற்றம், சமூக சூழல் மாற்றம் போன்றவை அவர்களுக்கு உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

முதியோருக்கு ஏற்படும் பொதுவான உளவியல் பிரச்சனைகள்

மனச்சோர்வு
மனச்சோர்வு என்பது ஒரு உணர்வுபூர்வமான மன நிலை பாதிப்பு. இதை வருத்தம், வெறுப்புற்ற மனநிலை, நம்பிக்கையிழந்த நிலை ஆகியவற்றின் மூலம் ஒரு முதியவர் வெளிப்படுத்தலாம்.

பொதுவாக முதியோர்களிடம் மனச்சோர்வும் தற்கொலை மனப்பான்மையும் அதிகளவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம், முதியோரின் வாழ்நாளின் பிற்பகுதியில் ஏற்படும் கடுமையான இழப்பே ஆகும்.

உதாரணமாக,
  • உடல்நலம் குன்றுதல்,
  • உடல்நிலையில் மாற்றம்,
  • பணி ஓய்வுக்குப் பின் ஏற்படும் வருமான இழப்பு,
  • உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழத்தல்,
  • வாழ்க்கைத் துணைவரை இழந்துவிடுதல்,
  • மகன் / மகள் களை விட்டு தனியே இருத்தல்,
  • மருமகள் / மருமகன் பிரச்சனை,
  • பெருளாதார பிரச்சனை,
  • தற்காலிக இடமாற்றம்

போன்றவற்றைச் சொல்லாம்.

முதியோருக்கு ஏற்படும் மனச்சோர்வை குடும்பத்தினர் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். முதுமையில் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

ஆரம்ப நிலையிலேயே முதியோருக்கு ஏற்படும் மனச்சோர்வை கண்டுபிடித்து, உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். தவறினால் தேவையற்ற சிரமங்கள் ஏற்பட நேரிடும்.

மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்,
  • தீயது ஏதோ நடக்கப்போகிறது என்ற பயம்,
  • எப்போதும் சோகமாகக் காணப்படுதல்,
  • உற்சாகமின்மை
  • ஒன்றில் கவனம் செலுத்த இயலாமை,
  • சோம்பேறித்தனம்,
  • எதிலும் ஆர்வமின்மை,
  • குற்றவுணர்வு,
  • ஒழுங்கற்ற பசி மற்றும் தூக்கம்,
  • வழக்கத்துக்கு மாறான மன உளைச்சல்,
  • உடல் கோளாறுகள்

ஆகியவற்றை மனச்சோர்வின் பொதுவான அறிகுறிகளாகக் கூறலாம்.

மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட முதியோர், சிறிய விஷயத்திற்கும் அதீதமாகக் கவலைப்படுவார்கள்; தொடர்ந்து உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாகக் கூறுவார்கள்; சில சமயம், மனச்சோர்வு ஞாபகச் சக்தியை குறைத்துவிடும்

மனக்கலக்கம்.
ஒருவரின் நடவடிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம், எதிர்ப்புணர்வு, கவனமின்மை, ஞாபகச்கக்திக் குறைவு, ஒழுங்கற்ற சிந்தனை ஆகியவற்றை மனக்கலக்கம் அல்லது பித்து பிடித்த நிலை என்று கூறலாம்.

இந்த நிலை, ஒரு நாளின் பொழுதில் மாறிக்கொண்டே இருக்கும். பாதிக்கப்பட்டவர் ஏதோ குழப்ப நிலையில் இருப்பதாக குடும்பத்தினர் நினைப்பார்கள்.

உதாரணத்திற்கு சுதந்திரமாகவும், நல்ல உடல் நலத்தோடும் இருப்பவர் திடீரென்று குழம்பியவராகவும் அமைதியற்றும் காணப்படுவார். சிறிது நேரத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். மீண்டும் பழைய நிலைக்குப் போய்விடுவார். சில சமயம் அரை மயக்கத்தில் இருப்பார். தூங்கும் வழக்கத்தில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கமின்றித் தவித்துவிட்டுப் பகலில் தூங்குவார். 

ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால், பித்து நிலையில் இருப்பவரின் நடவடிக்கையில் தாறுமாறான மாற்றங்கள் இருக்கும்.

இந்த மனக்கலக்கம் நிலைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடி கவனம் செலுத்தாவிட்டால், அதுவே நிறைய உடல்நலக் கோளாறுகள் வருவதற்குக் காரணமாகிவிடும். இதற்குக் காரணமாக நோய்த் தொற்று, பக்கவாதம், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றைச் சொல்லலாம்.

வேறு நோயைக் குணப்படுத்தச் சாப்பிடும் மருந்துகளின் பின்விளைவாகவும் பித்துநிலை முதியோருக்கு ஏற்படலாம்.

முதல் முறையாகப் பித்து நிலையால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயின் தன்மை சரியாகக் கண்டுபிடித்து சரியான சிகிச்சைக்குப் பிறகு பூரணமாகக் குணமாகிவிடுகிறார்கள். அப்படி உரிய சிகிச்சை அளிக்காத பட்சத்தில், அதுவே டிமென்ஷியா அல்லது இறப்புக்கோ வழிவகுத்துவிடும்.

டிமென்ஷியா
ஒருவர் தன் இயல்பான செயல்களைச் செய்ய முடியாத அளவுக்குச் மூளைத் திறனை இழந்துவிடும் நிலை 'டிமென்ஷியா' என்று அழைக்கப்படுகிறது.

மனக்கலக்கம் நிலையைப் போல் அல்லாமல், டிமென்ஷியாவின் பாதிப்புகள் ஒருவரிடம் கொஞ்சம் கொஞ்சம் ஏற்படுகிறது.

மூளை செயல்பாட்டுத் திறனை இழப்பதால் ஞாபகச்சக்தி, தெளிவான சிந்தனை, தீர்வு காணும் திறன், கணிக்கும் திறன், படிக்கும் மற்றும் எழுதும் திறன் பேச்சு ஆகியவற்றில் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட முதியவருக்குக் குறைந்த ஞாபகச்சக்தியே இருக்கும்; சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி கூட நினைவில் இருக்காது; பேசும்போது தகுந்த சொற்கள் கிடைக்காமல் திண்டாடுவார்கள்; பழக்கமான இடத்திற்கு கூட வழி கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும்.

முதியவர்களுக்கு டிமென்ஷியா முற்றத்தொடங்கினால், அன்றாட செயல்களான சாப்பிடுதல், உடை உடுத்துதல், காலைக்கடன்கள் முடித்தல், குளித்தல் போன்றவற்றைச் செய்வதற்குக் கூட மற்றவர்களின் உதவி தேவைப்படும்.

பெரும்பாலானவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் அதிகம் இருக்காது. அப்படியே இருந்தாலும், அது திசைதெரியாமல் சுற்றுதல், சமூக பழக்கவழக்கத்தல் மாறுதல், மனநிலையில் திடீர் மாற்றம் போன்றவைகளாக இருக்கும்.

டிமென்ஸியாவின் முக்கிய இரண்டு வகைகளாக அல்சீமர் நோய், வாஸ்குலர் டிமென்ஷியா ஆகியவற்றை குறிப்பிடலாம்.

அல்சீமர் நோய் உள்ளவர்களின் மூளைச் செல்கள் விரைவாக சோர்வடைந்துவிடுவதால், மூளையின் செயல்பாடு மற்றும் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

வாஸ்குலார் டிமெனிஷியா, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதாலோ அல்லது மூளையின் நரம்புகள் பாதிக்கப்படுவதாலோ  ஏற்படுகிறது. இந்த நோய் வந்தவர்களுக்குப் பெரும்பாலும் சர்க்கரை நோயோ அல்லது உயர் இரத்த அழுத்தமோ இருப்பது பின்னால்தான் தெரியவரும். இவையே வாஸ்குலார் டிமென்ஷியா வரக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

மேலே குறிப்பிட்ட காரணங்களைத் தவிர வேறு காரணங்களாலும் டிமென்ஷியா வரலாம். நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்; மூளையை ஸ்கேன் செய்யும் சோதனையும் அவசியம் செய்ய வேண்டும்.

சிந்தனைத் திறனில் ஏற்படும் பாதிப்பு,
சிந்திக்கும் திறன் பாதிக்கப்படும்போது, தர்க்கரீதியாக யோசிப்பதும் உண்மையை புரிந்துகொள்வதும் பாதிக்கப்படுகிறது.
  • மாயத்தோற்றம்,
  • பொய்யானவற்றை நம்புவது,
  • கூர்ந்து ஆராயும் திறனை இழந்துவிடுவது
  • கண்ணுக்கு முன் இல்லாத ஒன்று, இருப்பது போன்ற பிரமை (மாயத்தோற்றம்),
  • எந்த ஒலியும் உண்மையில் ஒலிக்காதபோது ஏதோ சப்தம் கேட்பதாக ஒருவர் நினைப்பது,
  • உடம்பில் ஏதோ பூச்சி ஊர்வதாக ஒருவர் நம்புவது

ஆகியவற்றை மனநலக் கோளாறுகளுக்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம்.

ஒருவர் படித்தவராகவும் பக்தியுடையவராகவும் இருந்தும் அதற்கு நேர்மாறான கருத்துகளை கூறத் தொடங்கினால் 'பொய்யானவற்றை நம்பும்' கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது பொருள். இப்படிப்பட்டவர் தன் மனைவி தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதாகவும், தனக்கு ஏதேதோ நோய் இருப்பதாகவும், தன்னை ஏதோ ஆபத்து துரத்துவதாகவும் கூறுவார்.

உளவியல் சிகிச்சைகள் & ஆலோசனைகள்.
முதியோருக்கு ஏற்படும் பல மனநல பிரச்சனைகளை. உரிய நேரத்தில் உளவியல் சிகிச்சை ஆலோசனை அளிப்பதன் மூலம் நோயாளியின் மன அழுத்ததைக் குறைத்து, வாழ்க்கை நிலையை மேம்படுத்தலாம்.
  • தனிப்பட்ட உளவியல் சிகிச்சை
  • குடும்ப ஆலோசனை
  • மருத்துவம்
  • திறமையை மேம்படுத்துதல்
  • புலன்களைத் தூண்டிச் செயல்படவைத்தல்
  • அமைதிக்கான மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை
போன்று திட்டமிட்ட உளவியல் சிகிச்சையும் தேவைப்படும்போது பக்கவிளைவுகள், பாதிப்புகள் இல்லாத அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையும் நல்ல பலனளிக்கும்.




உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   உளவியல் / மனநல ஆலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது முதியவருக்கான ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 58 – 99******00 – மன அழுத்தம் – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.






==--==


Contact Form

Name

Email *

Message *