------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

May 22, 2014

உண்மையில்லாத சில உண்மைகள். Some False Truths









உண்மையில்லாத சில உண்மைகள்.

'
ஒரு ஆற்றில் இரண்டு முறை இறங்க முடியாதுஎன்னும் ஒரு தத்துவம் உண்டு.
இதில் என்ன தத்துவம் உண்டுஎன்று நீங்கள் கேட்பீர்கள்.
ஒரு ஆற்றில் நான் இரண்டு முறையென்ன பல முறை இறங்கியிருக்கிறேன் என்பீர்கள்.
ஆனால் சரியாகச் சிந்தித்தால்அது தவறென்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
இன்னும் சொன்னால் 'ஒரு ஆற்றில் இரு முறை என்னஒரு முறை கூட உங்களால் இறங்க முடியாதுஎன்று சொன்னார் ஓஷோ.
இந்த தத்துவத்தைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சித்துப் பாருங்கள்.
ஒரு ஆற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆறு என்பது என்னஆறு என்பது ஓடும் நீரின் ஒரு நிலை.
நாம் ஒரு தரம் இறங்கும் போது இருக்கும் நீர்இன்னுமொரு முறை இறங்கும் போது இருப்பதில்லை.
ஆற்று நீர் ஓடிக்கொண்டே இருப்பதால்......இப்போது இருப்பது வேறு ஒரு நீர். அதாவது வேறு ஆறு. அப்போது இருந்தது வேறு ஆறு.
இன்னும் சொல்லப் போனால்ஒரே ஆற்றில் ஒரு முறை கூட உங்களால் இறங்க முடியாது.
நீங்கள் இறங்கும் போதுகாலை ஒரு ஆற்றில் வைத்தால்உடம்பு வேறு ஆற்றில்தான் இறங்கும்.
சரியாகப் பார்தால் நாம் நினைக்கும் ஆறு என்னும் ஒன்றே அங்கு இருக்காது.
என்ன புரிகிறதா............?
இது இப்படியே இருக்கஇன்னுமொரு விசயத்துக்கு வருவோம்.........!
எமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் உயிரனுக்களால் (cells) ஆனவை.
பெரும்பாலான உயிரனுக்கள் உயிர் வாழ்வது சில நாட்களே!
தினமும் எம்முடலில் பல கோடிக் உயிரனுக்கள் அழிந்துபல கோடிக் உயிரனுக்கள் மீண்டும் புதிதாக உருவாகின்றன. எமது உடலில்குறிப்பாக ஏதாவது ஒரு உறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக உங்கள் பெருவிரலை எடுத்துக் கொள்ளுங்கள்.
நேற்று நீங்கள் பார்த்த பெருவிரல்இன்று இருக்காது. அந்தப் பெருவிரலில் உள்ள கோடிக்கணக்கான உயிரனுக்கள் இறந்துபல கோடிக் கணக்கான உயிரனுக்கள் புதிதாக உருவாகி இருக்கும். அப்படி என்றால்அது எப்படி நீங்கள் நேற்றுப் பார்த்த பெரு விரலாக இருக்க முடியும்அதனால் ஒருநாளில் பார்ப்பதும்அடுத்த நாளில் பார்ப்பதும் வேறு வேறு. ஒரு உறுப்பே இப்படி என்றால்உங்கள் மொத்த உடலையும் யோசியுங்கள்.
எனவேஇன்று பார்க்கும் நீங்கள் இல்லைநாளை இருக்கும் நீங்கள்.
இதைச் சொன்னால் உங்களுக்குப் புரியாவிட்டாலும் அல்லது புரிய மறுத்தாலும்மூன்று வயதில் இருந்த நீங்கள் இப்போது இல்லையென்ற உண்மையை ஏற்பீர்கள். அந்த மாற்றம் தினமும் ஏற்பட்ட மாற்றங்களின் ஒரு தொகுப்பு.
என்ன புரிகிறதா........?
இதுவும் இப்படியே இருக்கமேலும் ஒரு விசயத்துக்கு வருவோம்..........!
காலங்கள் எத்தனை என்று உங்களைக் கேட்டால்இறந்த காலம்நிகழ் காலம்எதிர்காலம் என மூன்று உண்டு என்பீர்கள்.
இறந்த காலம் என்பது இருக்கிறது. நேற்றுசென்ற மாதம்சென்ற வருடம்எல்லாமே இறந்த காலங்கள். எதிர் காலம் என்பதும் இருக்கின்றது. நாளைஅடுத்த மாதம்அடுத்த வருடம்இவை எதிர் காலங்கள்.
ஆனால் நிகழ் காலம்......?
உண்மையில் நிகழ் காலம் என்ற ஒன்றே இல்லை. யோசித்துப் பாருங்கள்!
நிகழ் காலம் என்பது இன்றாஇல்லை. இன்று என்னும் போதுகழிந்த மணித்துளிகள் இறந்த காலம். வரப்போகும் மணித்துளிகள் எதிர் காலம் என்றாகிவிடும்.
நிகழ் காலம் என்பது என்னஇந்த மணியா....அல்லது இந்த நிமிடமா...அல்லது இந்த வினாடியா...எது நிகழ் காலம்?
இந்த வினாடிதான் நிகழ்காலம் என்று வைத்தால்ஒரு வினாடியை இப்போது கோடிக் கோடியாகப் பிரித்து விட்டார்கள் (நானோ வினாடி).
அப்படி என்றால் ஒரு கோடிக் கோடி வினாடிக்கு முன்னுள்ளது இறந்த காலம் என்றும்அடுத்த கோடிக் கோடி வினாடிக்குப் பின்னுள்ளது எதிர் காலம் என்றும் ஆகிவிடுமல்லவா?
இப்படிப் பார்க்கும் போது நிகழ் காலம் என்ற ஒன்றே இல்லாமல் சுருங்கிப் பூச்சியத்துக்கு வந்துவிடும்.
அப்படியாயின்நிகழ் காலம் என்னும் ஒன்றே இல்லாமல் போய்விடும்.
காலங்கள் இறந்த காலம்எதிர் காலம் என்பது மட்டுமே என்றாகிவிடும்.
என்ன புரிகிறதா.........?
மேலே இருக்கும் முன்று சம்பவங்களை மனதில் வைத்துச் சிறிது சிந்தித்துப் பார்த்தால்........! நாம் நினைக்கும் எதுவுமே உண்மை இல்லை என்பது புரிய வரும். இருப்பது எல்லாமே மாற்றங்கள்தான்.
உண்மை என்றால் உண்மையில் என்னஉண்மை என்பது என்றுமே மாறாதது. மாற்றங்களுக்கு உள்ளாவது எதுவுமே உண்மை இல்லை. யோசித்துப் பாருங்கள்.......! மாறுவது எப்படி உண்மையாகும்?
மாறும் எதையும் உண்மை என்று நீங்கள் ஏற்பீர்களா....?
மாறுவது என்றுமே உண்மையல்லமாயை.
கடுமையாக இறுக்கமான விசயத்தைப் பார்த்த நாம்கொஞ்சம் சாவகாசமாக, அன்றாடம் நாம் பார்க்கும் சில பொய்யான உண்மைகளைப் பார்ப்போம்.

'
சூரியன் கிழக்கே உதித்துமேற்கே மறையும்என்பார்கள். இது எவ்வளவு மாபெரும் பொய் சொல்லுங்கள்.
சூரியன் என்பது உதிப்பதும் இல்லை. மறைவதும் இல்லை.
அது எப்போதும் ஒரே இடத்தில் இருந்து சுற்றுகிறது.
பூமி தன்னைத் தானே சுற்றுவதால்சூரியன் உதிப்பது போலவும்மறைவது போலவும் எமக்குத் தெரிகிறது.

'
பூமியில் மூன்றில் இரண்டு பகுதி நீரும்மூன்றில் ஒரு பகுதி நிலமும்என்பார்கள்.
ஆனால் இதுவும் பொய்யான ஒன்று.
பூமியில் எல்லாமே நிலம்தான். அதாவது நூறு விகிதம் நிலம்.
ஆனால் அதில் மூன்றில் இரண்டு பங்கு நிலத்தின் மேல் நீர் இருக்கிறது.




==--==

Contact Form

Name

Email *

Message *