நாம் வாழ்கையில் அனைவருமே நாம் எடுத்துக் கொண்ட
காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னால்
வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவு தான் எனக்கு கிடைப்பது தான் கிடைக்கும் என்று
முயற்சிக்காமல் விட்டுவிடுகிறோம். ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது.
ஆசையுடன் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும்.
நீ வெற்றிக்காக போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள்
நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்.
வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள்:
v உங்கள் இலக்கை தெளிவாக
வைத்துக் கொள்ளுங்கள். மனிதன் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் அவன்
வாழ்க்கையை மாற்றியமைக்கப்போகும் திருப்பு முனை. இலக்குகள் எளிதானதோ, கடினமானதோ, சாதரணமானதோ, உயர்வானதோ அந்த இலக்குகளை அடைவதற்கான வழிக்கான பாசிடிவ்
எண்ணங்களும், நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க
வேண்டும். பின், ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து
செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும்.
எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்
புல் கூடத்தான் பூமியை பிளந்து வரும்.
உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்
நில்லாமல் ஒடிடு இலக்கு வரும்
v தன்னம்பிக்கையும் தைரியமும்
நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி
நிச்சயம். மாறாக, எதிர்மறையான எண்ணங்களை
வளர்த்துக் கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான்
இருக்கும். ஏனென்றால், உங்கள் ஆழ்மனம், உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது. ஆழ்மனதிற்கு
நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பி
அனுப்புகிறது. உதாரணமாக, தாழ்வுணர்ச்சி, பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது, அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது. ஆகவே, தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும் என்ற
எண்ணத்தை மனதில் வளர்த்துகொள்ளுங்கள்.
நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டு இரு ‘ நதி ’ போல.....
ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கு “ கடலாக ”
நம் மனத்தில் எழும் பதட்டம், பயம் ஆகியவை உடனுக்குடன் நீக்கப்பட வேண்டும். நம் நினைத்த இலக்கை
அடைய வேண்டும் என்று அரைமனதுடன் இறங்குவது வெற்றி தராது. அது சேற்று நிலத்தில்
செல்லும் நீரோடையில், தூய்மை பெற நீராடியது
போலாகும். நீரின் பாய்ச்சல் மெதுவாக இருக்கும் போது சேறு அகலாது. அதுபோல பயமும், பதட்டமும் நிறைந்த மனதுடன் முயற்சிக்கும் அனைத்து செயலும் தோல்வியை
தரும், ஆகவே பயம், பதட்டத்தை தவிர்த்து
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர் வெற்றி நிச்சயம்.
தோல்வி உன்னை துரத்துகின்றது என்றால்!
வெற்றியை நீ நெருங்குகின்றாய் என்று அர்த்தம்
v வெறுமனே ஒரு செயலை
செய்கிறோம் என்றில்லாமல், எதை செய்கிறோம் என்ற தெளிவு
வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு ஆகும் நேரத்தைவிட, அதனால் கிடைக்கும்
நன்மைதான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
காது கேட்காத தவளை:
மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.
அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர்
"இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால்
அவ்வளவுதான்" என்றார்.
உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.
சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே
செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.
உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.
ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை
மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.
பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர்
"உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து
சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது "
என்றது.
நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில
நேரங்களில் முன்னேற முடியும்.
ஏழை சிறுவன்:
ஏழை சிறுவன் ஒருவன் , தனது விலை உயர்ந்த காரை
வியப்புடன் பார்ப்பதை பார்த்தவர், அந்த சிறுவனை உக்காரவைத்து
கொஞ்சதூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது ,என்ன விலை என சிறுவன் கேட்டான்.தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.அப்படியா!
அவர் மிகவும் நல்லவர் என சிறுவன்சொல்ல,
நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய்
அல்லவா? சிறுவன் சொன்னான். ‘இல்லை, நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும்என நினைக்கிறேன்’ என்றான்.!