முன்னே ஒரு காலத்துல ஒரு காட்டில் குரங்கு ஒன்னு பாம்பைக் கெட்டியாகப்பிடித்துக் கொண்டது. குரங்குப்பிடி என்பார்கள் அல்லவா? அது போலவே அந்த குரங்கும் பிடித்துக் கொண்டுவிட்டது.
பாம்பை பிடித்த பிறகு விடுமா…? விடாது. விடவே மாட்டாது. விட்டால் பாம்பு கடித்துவிடுமோ என்ற பயத்தில். பாம்பைப் பிடித்தவாறு அந்த பயத்துடன் அது கத்திக்கொண்டே திரியும். சாப்பிடாது. தண்ணீர் குடிக்காது. அந்த குரங்கின் கையில் பிடிபட்ட பாம்பு எந்தக் காலத்திலோ செத்துப்போயிருக்கும். இருந்தாலும் குரங்கு மிச்சம் மீதம் இருக்கும் பாம்பை விடமாட்டாது.
இது பயத்துடன் பாம்பை கையில் கொண்டு வருவதை கண்டு மற்ற விலங்குகளும் விலகி ஓடும். இந்த குரங்கு பாம்புடன் அலைவதால், இதற்கு மற்ற விலங்குகளும் பசியாற்ற உதவி செய்வதில்லை.
சிலநாட்களில் குரங்கு பயத்தாலும் பசி தாகத்தாலும் களைப்பாலும் இறந்துபோய்விட்டது. இறந்த பிறகும் அது பாம்பைப் பிடித்தவாறாகத்தான் இறந்துகிடந்தது.
கதையின் நீதி: இல்லாததையெல்லாம் மனதில் நிறுத்திக்கொண்டு தன்னம்பிக்கையை மனதிலிருந்து அகற்றிவிடாதீர்கள்.
The
“Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai:- 9786901830
Pondicherry:- 9865212055
Panruti:- 9443054168
97869 01830
Vivekanantha Psychological Counseling Centre Health Line
----