------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

Showing posts with label child counseling. Show all posts
Showing posts with label child counseling. Show all posts

October 20, 2011

*பாம்பைப் பிடித்த குரங்கு*





 psychologist counseling clinic velacheri



முன்னே ஒரு காலத்துல ஒரு காட்டில் குரங்கு ஒன்னு பாம்பைக் கெட்டியாகப்பிடித்துக் கொண்டது.  குரங்குப்பிடி என்பார்கள் அல்லவா? அது போலவே அந்த குரங்கும் பிடித்துக் கொண்டுவிட்டது. 


பாம்பை பிடித்த பிறகு விடுமா…? விடாது. விடவே மாட்டாது. விட்டால் பாம்பு கடித்துவிடுமோ என்ற  பயத்தில். பாம்பைப் பிடித்தவாறு அந்த பயத்துடன் அது கத்திக்கொண்டே திரியும். சாப்பிடாது. தண்ணீர் குடிக்காது. அந்த குரங்கின் கையில் பிடிபட்ட பாம்பு எந்தக் காலத்திலோ செத்துப்போயிருக்கும். இருந்தாலும் குரங்கு மிச்சம் மீதம் இருக்கும் பாம்பை விடமாட்டாது. 


இது பயத்துடன் பாம்பை கையில் கொண்டு வருவதை கண்டு மற்ற விலங்குகளும் விலகி ஓடும். இந்த குரங்கு பாம்புடன் அலைவதால், இதற்கு மற்ற விலங்குகளும் பசியாற்ற உதவி செய்வதில்லை. 


சிலநாட்களில் குரங்கு பயத்தாலும் பசி தாகத்தாலும் களைப்பாலும் இறந்துபோய்விட்டது. இறந்த பிறகும் அது பாம்பைப் பிடித்தவாறாகத்தான் இறந்துகிடந்தது. 

கதையின் நீதி: இல்லாததையெல்லாம் மனதில் நிறுத்திக்கொண்டு தன்னம்பிக்கையை மனதிலிருந்து அகற்றிவிடாதீர்கள். 






The “Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai:- 9786901830 
Pondicherry:- 9865212055 
Panruti:- 9443054168
97869 01830
Vivekanantha Psychological Counseling Centre  Health Line
----

வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம்









 Vivekananda Homeopathy Clinic velacheri

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.

அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.

புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.

இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.

குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...

பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...

- வேகமான சிந்தனை வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதனை விளக்கும் ' குயிக் திங்கிங் ஆன் யுவர் ஃபீட்' என்ற புத்தகத்திலிருந்து. 








The “Psychologist” Psychological Counseling Centre’s at
Chennai:- 9786901830 (Head office)
Pondicherry:- 9865212055 (Branch office)
Panruti:- 9443054168 (Branch Office)
97869 01830
Vivekanantha Psychological Counseling Centre  Health Line



---

Contact Form

Name

Email *

Message *