------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

January 10, 2012

உணர்ச்சிகள் - Feelings

 feelings psychological counseling clinic chennaiஉணர்ச்சிகள்
Ø  அன்பு-Love with care
Ø  பாசம் - Affection
Ø  கோபம் - Anger
Ø  ஆனந்தம் - Joy
Ø  இன்பம், மகிழ்ச்சி - Happiness
Ø  துக்கம் - sorrow
Ø  ஆசை - Want
Ø  பொறாமை - Jealousy, Envy
Ø  வெறுப்பு - Hate, Disgust
Ø  விரக்தி - Anguish
Ø  அமைதி - Peace
Ø  பயம் - Fear
Ø  கவலை - worry
Ø  எதிர்பார்ப்பு - Anticipation, Hope,
Ø  ஆச்சரியம் - Suprise
Ø  வெட்கம் - Shyness
Ø  பரிவு, இரக்கம் - Pity
Ø  காதல் - Love
Ø  காமம் - Sexual Attraction
Ø  அரிப்பு - Irritation
Ø  சலிப்பு - Boredom
Ø  குற்றுணர்வு - Guilt
Ø  மனவுளைச்சல் - Stress
Ø  ஈர்ப்பு - attraction
Ø  பெருமை - pride
Ø  உணர்வின்மை - apathy
Ø  நம்பிக்கை - hope
Ø  மனக்கலக்கம், தவிர்ப்பு - anxiety
Ø  பற்று - Attachment
Ø  சோம்பல்-Lazyஅகமுகி அல்லது அகமுகர் (Introvert)
அகமுகி அல்லது அகமுகர் (Introvert) என்பவர் பிறருடன் கலந்து பழகாமல் பேசாமல், தம் மனதிற்குள்ளாகவே சிந்திக்கும் பழக்கம் கொண்டவர். தான் நினைப்பவற்றை வெளியில் சொல்லாமல் மனதிற்குள்ளாகவே உருவாக்கம் செய்து கொள்வர். கனவுலகில் சஞ்சரிப்பவர்களாக இருக்கலாம். தம் சிந்தனை உலகில் வாழ்பவர்கள் எதனையும் மனதிற்குள் பூட்டி வைத்திருப்பர்; பெரும்பாலும் வெளி உலகத் தொடர்புகள் இல்லாதவராக இருப்பர்.


அன்பு
அன்பு என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் உணர்வும் அநுபவமும் ஆகும். அன்பு என்ற சொல்லை ஆங்கிலத்தின் "love" என்ற சொல்லுக்கு இணையாகக் கருதினாலும், "love" என்னும் சொல் குறிக்கும் எல்லாப் பொருளையும் "அன்பு" என்னும் சொல் குறிப்பதில்லை. "love" என்பதற்கு ஆங்கிலத்தில் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலின் மீது உள்ள "விருப்பம்" (நான் பாயாசம் "விரும்பி" உண்பேன்), இருவருடையே காணப்படும் பொதுவான அன்பு, மிக நெருக்கமான "காதல்" உணர்வு வரை பல பொருள்களில் அச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. அன்பு என்ற சொல்லுக்குரிய உணர்வும் எண்ணக்கருவும் தமிழுக்குத் தனித்துவமானது எனலாம். இவ்வாறு மொழிகளிடையே "அன்பு" என்னும் பொருள் தரக்கூடிய சொற்கள் குறிக்கும் உணர்வுகள் பலவாறான வேறுபாடுகளைக் கொண்டவையாக இருப்பதால், அன்புக்கு உலகம் தழுவிய வரைவிலக்கணம் ஒன்றைக் கொடுப்பது கடினமானது.

தமிழிலும் அன்பு என்னும் உணர்வு பல்வேறு மட்டங்களில் வெளிப்படுவதைக் காணலாம். தாய் மீதான அன்புக்குச் சிறப்பான இடம் உண்டு. அன்பு அதன் பல்வேறு வடிவங்களில் மனிதர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு காரணியாக உள்ளது. அத்துடன் அன்பின் உளவியல் முக்கியத்துவம் காரணமாக ஆக்கக் கலைகளில் அது ஒரு முக்கியமான கருப்பொருளாக ஆளப்படுகிறது.

கோபம்
கோபம் என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறிகொண்டதாக இருக்கலாம். கோபம் ஏற்படும்போது உடலளவில் அதிக இரத்த அழுத்தம் வேகமான இதயத்துடிப்பு, அட்ரீனாலின் (adrenaline) நோராட்ரீனலின் (noradrenaline)அதிகம் சுரக்கலாம்.

இன்பம்
இன்பம் வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பம் என்பதை இறுதியாக வரையறை செய்வது கடினம் எனினும் இன்பத்தைக் கண்டுணரலாம்.

மழலையின் பேச்சில், இசையின் இனிமையில், காற்றின் வருடலில், மழையில் நனைதலில், கூழின் ருசியில், இயற்கையில், நட்பில், காதலில், உழைப்பில் என வாழ்வின் பல தடங்களில் இன்பத்தை மனிதர் உணரலாம். சிறப்பாக "இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும்." என சோ. ந. கந்தசாமி இந்தியத் தத்துவக் களஞ்சியம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

மேலும் அவர் "பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்குமேல் இன்பம் சார்ந்த பாவியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்று தொல்ல்காப்பியர் இன்பதற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத்தக்கது" என்று சுட்டி காட்டுகிறார். தமிழர் மெய்யியலில், இலக்கியத்தில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது.

உவகை
உவகை என்பது மன மகிழ்வு அல்லது இனிமையாக உணர்தலைக் குறிக்கும்.

பொறாமை
பொறாமை என்பது (பொறாமைக்குணம் என்றும் அழைக்கப்படுகின்றது) "ஒரு நபர் மற்றவரின் (அறியக்கூடிய) மிகச்சிறந்த நடத்தை, சாதனை அல்லது உடைமை ஆகியவற்றை பெறமுடியாமல் போகும் போதும் மற்றும் அதைப் பெற விரும்பும் போதும் அல்லது மற்றொருவர் அதைப் பெறக்கூடாது என விரும்பும் போதும் நிகழும்" ஒரு வித உணர்ச்சியாகவரையறுக்கப்படலாம்."

பொறாமை என்பது தாழ்வு தன் மதிப்பு உணர்விலிருந்தும் வந்திருக்கலாம், அதன் விளைவு அதிகப்படியான சமூக ஒப்பீடு தனிநபரின் சுய உருவத்தை அச்சுறுத்துகின்றது: மற்றொரு நபர் தான் முக்கியமெனக் கருதுவதை வைத்திருந்தால் பொறாமை அடைகின்றார். பிற நபர் பொறாமைப்படுபவரை ஒத்திருப்பதாக முன்னரே அறிந்திருந்தால், குறிப்பிட்ட நோக்கத்திற்காக பொறாமையானது தூண்டப்படும், ஏனெனில் இது அவர் விரும்பி வைத்திருப்பதை நன்றாக இருப்பதாக பொறாமைப்படுபவருக்கு சமிக்கை அளிக்கின்றது.

பெர்ட்ராண்ட் ருஸ்ஸல் என்பவர் பொறாமை பற்றி மகிழ்ச்சியின்மையின் முக்கிய காரணங்களில் ஒன்று எனக் கூறினார்.[4] இது மனித இயல்பின் உலகளாவிய மற்றும் மிகுந்த துரதிர்ஷ்டவசமான நோக்கு ஆகும், ஏனெனில் பொறாமை படைத்த நபர் தனது பொறாமையால் தனக்கு மட்டும் மகிழ்வின்மையை விளைவிப்பது இல்லை, ஆனால் அது பிறருக்கும் இடர்யூறுகளை ஏற்படுத்துகிறது. பொறாமையானது பொதுவாக எதிர்மறையாகப் பார்க்கப்படுகின்றது, ருஸ்ஸல் பொறாமையானது குடியரசு நோக்கிய இயக்கங்களின் பின்னால் வழிச்செலுத்தும் சக்தியாக இருப்பதாகவும் நம்புகின்றார் மற்றும் அதிகமான சமூக அமைப்பைப் பெறும் பொருட்டு அது கண்டிப்பாக சகித்துக்கொள்ளப்பட வேண்டும்.

விரக்தி
விரக்தி என்பது தீவிரமான உணர்ச்சிகளில் ஒன்று. இலக்குகளை அடைய முடியாமல், தோல்வி மேல் தோல்வி வந்து, தீர்வுகள் காண முடியாமல், செய்வதறியாது தவிக்கும் கையறு நிலையை விரக்தி எனலாம்.

அமைதி
அமைதி என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன எனினும் இக் கட்டுரையில் இது போர், பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச் சொல்லாகவே பயன்படுத்தபட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதிஎன்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். பன்னாட்டு மட்டத்தில் இதுபோர் இல்லாத நிலையையும் குறிக்கும். குடிசார் ஒழுங்கின்மை இல்லாதநிலை எனவும் இதனை வரையறுப்பது உண்டு. தனிப்பட்டவர்கள் சார்பிலும் அமைதி என்னும் சொல் பயன்படுகிறது. இது, வன்முறைசாராத வாழ்வு என்னும் கருத்துருவுடன் தொடர்புள்ளது. இங்கே பிற மனிதருடனான தொடர்புகளும் மதிப்பு, நீதி, நல்லெண்ணம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் குறிக்கின்றன. இதே புரிதலின் அடிப்படையில், ஒருவர் தனது சொந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைதி பெறுதல் என்ற ஒரு நிலையும் உண்டு. இது மன அமைதி அல்லது நிம்மதி என்பதோடு தொடர்புபட்டது. பல வழிகளிலும், அமைதி என்பதன் அடிப்படையான பொருளில், முரண்பாடுகளின் மூலங்களாகப் பாதுகாப்பின்மை, [சமூகநீதியின்மை]], பொருளியல் ஏற்றத்தாழ்வு என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன. அமைதி என்பது முரண்பாடுகளின் முடிவைக் குறிக்கும் ஒரு இலட்சிய நிலை எனலாம்.

மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகநீதி இன்மை காரணமாக அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடைப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.

பயம் (fear)
பயம் (fear) என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சிவயப்பட்ட வெளிப்பாடாகும். இதன் அடிப்படை வழிமுறையானது வலி அல்லது ஆபத்தின் அச்சுறுத்தல் போன்ற பிரத்யேகத் தூண்டலின் மூலமாக விளைகிறது. பயம் என்பது அடிப்படையான அல்லது உள்ளார்ந்த மன உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றாக உள்ளது என ஜான் பீ. வாட்சன், பிரெட்டஸ்-மெஹல்ஹெஸ், ராபர்ட் ப்லட்சிக் மற்றும் பால் எக்மன் போன்ற சில உளவியலாளர்கள் கூறுகின்றனர். மகிழ்ச்சி, துக்கம் மற்றும் கோபம் போன்ற மன உணர்ச்சிகளும் இந்த வெளிப்பாடுகளில் அடங்கியுள்ளன. பயம் கண்டிப்பாக மனக்கலக்கம் தொடர்பான உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்து தனிப்பட்டு இருக்க வேண்டும். குறிப்பாக மனக்கலக்கம் என்பது வெளிப்புற அச்சுறுத்தல் ஏதும் இல்லாமல் ஏற்படக்கூடியதாகும். மேலும் பயமானது தப்பித்துக்கொள்ளல் மற்றும் தவிர்த்தல் போன்ற பிரத்யேக நடத்தைகளை ஒத்துள்ளது. ஆதலால் மனக்கலக்கம் என்பது கட்டுப்படுத்த முடியாத அல்லது தவிர்க்க முடியாத ஒன்றாக உணரக்கூடிய அச்சுறுத்தல்களின் விளைவாக ஏற்படுகிறது.[1] பயம் என்பது மோசமானச் சூழல் அல்லது தொடரும் ஏற்கமுடியாதச் சூழல் போன்ற பெரும்பாலும் வருங்கால நிகழ்வுகளை எண்ணியே ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பயமானது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விசயத்திற்கான உடனடி சலனம் ஆகும்.

கவலை அல்லது துயரம்
கவலை அல்லது துயரம் என்பது இழப்பு, உதவியற்ற நிலை, பயனற்ற நிலை போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒரு மன உணர்வாகும். இந்நிலையில் மனிதர்கள் பொதுவாக அமைதியாகவும், ஆற்றலற்ற நிலையிலும், ஏனையோரிடமிருந்து விலகியும் இருக்கத் தலைப்படுவர். அத்துடன் அழுகை மூலமும் அவர்களது இந்த மனநிலை வெளிக்காட்டப்படும்.

மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் அது கவலை எனவும், தொடர்ந்த, ஆழமான மனநிலை பாதிப்பு இருப்பதுடன், தமது வழக்கமான செயல்களை செய்யும் திறனை இழந்தும் இருப்பின் அது மனச்சோர்வு எனவும் கருதப்படும்.

போல் எக்மான் வகுத்துள்ள ஆறு அடிப்படை உணர்ச்சிகளான மகிழ்ச்சி, கவலை, கோபம், ஆச்சரியம், பயம் மற்றும் அறுவறுப்பு ஆகியவற்றில் கவலையும் அடங்கும்

காதல்
காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்து ஒர் உணர்வு, சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை. பொருட்கள், இயற்கை, தொழில், கலை, கருத்தியல்கள் என பலவற்றை நோக்கியும் காதல் ஏற்படும் என்று கூறப்பட்டலும், அவற்றின் பொருள் வேறுபட்டது. தமிழ் இலக்கியத்தில் காதல் விரிவாக அலசப்பட்டுள்ளது.

காமம்
காமம் என்பது ஆசை,விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பஙகளையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல்.

அறிதிறன் (cognition)
அறிதிறன் (cognition) என்னும் சொல், மனிதர்களைப் போல, தகவல்களை அலசுதல், அறிவைப் பயன்படுத்தல் மற்றும் முன்னுரிமைகளை மாற்றுதல் போன்றவற்றுக்கான புலனமைப்புக்களைக் குறிப்பதற்காக மிகத் தளர்வான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிதிறன் அல்லது அறிதிறச் செயல்முறை இயற்கையானதாகவோசெயற்கையாகவோ, தன்னுணர்வு கொண்டதாகவோ, தன்னுணர்வு அற்றதாகவோ, இருக்கலாம். இதனால், இவை, நரம்பியல், உளவியல், தத்துவம், கணினி அறிவியல் போன்ற துறைகளில், பல்வேறு நோக்குகளிலும், சூழல்களிலும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. அறிதிறன், பண்பியற் கருத்துருக்களான மனம், தர்க்க அறிவு(ஏரணம்), நோக்கு (perception),நுண்ணறிவு (intelligence), கற்றல் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அறிதிறன், மனித மனத்தின் பெருமளவு வல்லமைகளைக் குறிப்பதுடன், செயற்கை நுண்ணறிவுக்கு இருக்கவேண்டிய இயல்புகளையும் குறிக்கின்றது. அறிதிறன், உயர்நிலை உயிரினங்களில் காணப்படும் பண்பியல் (abstract) இயல்பாகும். இதனால் இது மூளையின்அல்லது பண்பியல் நிலையிலான மனத்தின் நேரடியான இயல்பாகக் குறியீட்டு நிலையில் ஆய்வு செய்யப்படுகின்றது.

நுண்ணறிவு (Intelligence)
நுண்ணறிவு (Intelligence) என்பது, திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணல், பண்பியலாகச் சிந்தித்தல், எண்ணக்கருக்களையும் மொழியையும் விளங்கிக்கொள்ளல், கற்றல் போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். நுண்ணறிவு என்பது சில சமயங்களில், பரந்த பொருளில் நோக்கப்பட்டாலும், உளவியலாளர்கள், இதனை, ஆக்கத்திறன், ஆளுமை, அறிவுநுட்பம் (wisdom), ஒருவரின் சிறப்புப் பண்புகள் என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே கருதுகிறார்கள்.

மனம்
மனம் என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.

மனம் என்பது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான கோட்பாடுகள் நிறையவே உள்ளன. பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில், ஆதிசங்கரர், புத்தர் போன்ற பல கிரேக்க, இந்திய தத்துவஞானிகள் இதுபற்றிக் கூறியுள்ளனர். நவீன அறிவியலுக்கு முற்பட்ட காலக் கோட்பாடுகள் இறையியலை அடிப்படையாகக் கொண்டவை.

ஆன்மாவுக்கும் மனத்துக்குமான தொடர்புகள் பற்றிப் பேசுகின்றன. நவீன கோட்பாடுகள், அறிவியல் அடிப்படையிலான மூளை பற்றிய புரிந்துகொள்ளலின் அடிப்படையில் ஆனவை. இவை மனம் என்பதை உளவியலின் ஒரு தோற்றப்பாடாக நோக்குகின்றன. அத்துடன் இச்சொல் ஏறத்தாழ உணர்வுநிலை (consciousness)என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எந்தெந்த மனித இயல்புக் கூறுகள் மனத்தை உருவாக்குகின்றன என்பதும் பெருமளவில் விவாதிக்கப்பட்ட ஒரு விடயமாகும். சிலர், தர்க்க அறிவு, ஞாபகம் போன்ற உயர்நிலை அறிவுச் செயற்பாடுகள் மட்டுமே மனத்தை உருவாக்குகின்றன என்கின்றனர். இதன்படி, காதல், வெறுப்பு, பயம், களிப்பு போன்ற உணர்வுகள் இயல்பிலும், உருவாக்கத்திலும் மனத்திலிருந்து வேறுபட்டவையாகும். வேறு சிலர், பகுத்தறிவு, உணர்வு என்பன சார்ந்த மனித இயல்புகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தப்பட முடியாதவை என்றும், அவை இரண்டுமே இயல்பிலும், உருவாக்கத்திலும் ஒரே விதமானவை என்றும் ஆதலால், இவையனைத்தும் மனத்தின் பகுதிகளாகவே கொள்ளப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்

சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை
சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.

ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. அறிவியல் நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது கோட்பாடு இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஒரு அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.

இருப்பினும் மனிதர் எப்படி சிந்திக்கிறார்கள்? மூளையின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன.

மனித மூளை
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.

ஆன்மா
இந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா எனப்படுகிறது. ஆன்மா என்ற வடமொழிச் சொல்லின் வேர்ச்சொல்லான ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது.

நான் யார்
இக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரனையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு நான்ஆக முடியாது. முதல் காரணம் இது என்உடம்பு என்கிறோம். என்உடம்பு, ‘என்கண், ‘என்காது, ‘என்ருசி, ‘என்வாசனை என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ நாம்இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் நாம்இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ நாம்இல்லை. நான், நான்என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங்கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே நாம்என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான நான்

பகுத்தறிவு
பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து அதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

நினைவாற்றல்
நினைவாற்றல் ஐம்புலன்களில் இருந்து வரும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும்.

குறுகிய கால நினைவாற்றல்
அத்தனை தகவல்களையும் மூளையிலேயே சேமித்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இதுவே குறுகியகால நினைவாற்றல் என்று வகைப்படுத்தப்படுகிறது.

நீண்டகால நினைவாற்றல்
நாம் செய்யும் தொழிலுக்குத்தேவையானவை, நம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தவை ஆகிய தகவல்கள் நம்முடைய மூளையில் நீண்டகால நினைவுகளாக தங்கிவிடுகின்றன. நீண்டகால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சிலநேரங்களில் சிரமப்படுவதை நாம் உணர முடியும்.

மூளை பலசெய்திகளை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட தகவல்களுடன், புதிய தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகள் அந்த தகவல்கள் வெளிக்கொணரப்படாமல் போனால், கோடிக்கணக்கான தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. இதனால்தான் நாம் சந்திக்கும் சிறுவயதுத் தோழரிடம், “உங்களுடைய பெயர் நாக்கில் இருக்கிறது; வரமாட்டேன் என்கிறதுஎன்று சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.

குழந்தை பிறந்து மூன்று வயது வரையில் தான் பார்ப்பது, கேட்பது அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளையில் பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மூன்றுவயதிற்கு மேல்தான் நீண்டகால நினைவுகள் படிப்படியாக உருவாகின்றன.

ஏரணம் (Logic)
ஏரணம் (Logic) என்பது அறிவடிப்படையில் ஒன்று உண்மை, அது ஏற்கக்கூடியது (= ஏலும்) என்று அறியவும், ஒரு முடிவுக்கு வரவும், உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய அறிவுத்துறை. ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் = ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல்-> ஏர் ஏரணம் என்றாயிற்று ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும் (= இயலும் பொருந்தும்), ஏலாது (இயலாது, பொருந்தாது) என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட துறையைக் குறிக்கும். ஆங்கிலத்தில் இதனை Logic (லாசிக்) என்று கூறுவர்.

மேற்குலக மெய்யியல் வரலாற்றில் முற்காலத்தில் இலக்கணம், ஏரணம், உரைதிரம் (அணியியல்) (rhetoic) ஆகிய மூன்றும் முக்கியமானதாகக் கருதப்பெற்றன. இந்திய மெய்யியல் உலகில் ஏரணம், தருக்கம், நியாயம் முதலான கருத்தியல் துறைகள் இருந்தன. மேற்குலக மெய்யியலில் லாச்யிக் (ஏரணம்) என்பது கிரேக்க மொழிச் சொல்லாகிய லோகோசு (λόγος, logos) என்பதில் இருந்து பெற்றது. இதன் பொருள் சொல், எண்ணம், சொற்கருத்தாடல், காரணம், கொள்கைஎன்பதாகும்.

அரிசுட்டாட்டில் வளர்த்தெடுத்த சில்லாஜிஸ்ட்டிக் (syllogistic) அல்லது ஏரண முறையீடு என்னும் முறை 19 ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் முன்னணியில் இருந்தது. அதன் பின்னர் கணிதத்தின் அடித்தளங்கள் பற்றி கூர்ந்தெண்ணிய போது குறியீட்டு ஏரணம் அல்லது கணித ஏரணம் என்னும் துறை தோன்றியது. 1879 இல் ஃவிரெகெ (Frege) எழுதிய எழுத்து என்று பொருள் படும் பெக்ரிஃவ்ஷ்ரிஃவ்ட் (Begriffsschrift) என்னும் தலைப்பில் குறியீடுகள் இட்டுத் துல்லியமாய் ஏரணக் கொள்கைகள் பற்றி விளக்கும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். இதுவே தற்கால ஏரணத்தின் தொடக்கம் எனலாம். இந்நூலை குறியீடு மொழியில், எண்கணித முறையை ஒற்றிய, தூய எண்ணங்கள் ("a formula language, modelled on that of arithmetic, of pure thought.") என்னும் துணைத் தலைப்புடன் வெளியிட்டார். 1903 இல் ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஃகெட் மற்றும் பெர்ட்ரண்டு ரசல் ஆகிய இருவரும் சேர்ந்து பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணித கருதுகோள்கள்) என்னும் புகழ்பெற்ற நூலை எழுதி கணிதத்தின் அடித்தள உண்மைகளை குறியீட்டு ஏரண முறைகளின் படி முதற்கோள்கள் (axioms) மற்றும் முடிவுகொள் விதிகளால் அடைய முற்பட்டு பல உண்மைகளை நிறுவினார்கள். 1931 இல் கியோடல் என்பார் முடிவுடைய எண்ணிக்கையில் முதற்கோள்கள் இருந்தால் குழப்பம் தராத (ஐயத்திற்கு இடம்தரா) உறுதியான முடிவுகளை ஏரண முறைப்படி அடைய இயலாது என்று நிறுவினார். இதன் பயனாய் இவ்வகையான வழிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்

---

Contact Form

Name

Email *

Message *