------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

March 15, 2013

மிகவும் வித்தியாசமான நோய்கள் சில







சில மிகவும் வித்தியாசமான நோய்கள்

1. Reduplicative Paramnesia
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் இருக்கிற இடம் இரட்டிப்பாகி விட்டதாக நினைப்பார்கள். அதாவது தங்கள் வீட்டில் இருந்து கொண்டே இது தனது வீடு அல்ல தன வீட்டைப் போன்ற இன்னுமொருவர் வீட்டில் இருப்பது போல நம்புவார்கள்.

2. Cotard Delusion
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் , தாங்கள் இறந்து விட்டதாகவும் தங்கள் உடல் புதைக்கப்பட்டு அழுகிக் கொண்டிருப்பதாகவும் நினைப்பார்கள்.

3. Fregoli Delusion
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரையும் ஒருவர் போலவே நோக்குவார்கள். உருவம் வேறுபட்டுத் தெரிந்தாலும் குறிப்பிட்ட ஒரு நபரே தன் முன்னாள் வெவ்வேறு உருவங்களில் தெரிவதாக நம்புவார்கள்.

4. Capgras Delusion
உண்மையில் தனக்குத் நெருக்கமான ஒருவரையே அது அவர் அல்ல வேறு ஒருவர் தனக்கு நெருக்கமான அந்த நபர் போல வேசமிட்டு வந்துள்ளதாக நினைப்பார்கள்.

5. Stendhal Syndrome
இந்த நோயாளிகளுக்கு அழகான சித்திரங்களைக் கண்டாலே போதும் இதயம் பட படக்கும், மனக்குழப்பம், தலைச் சுற்று என்பவை ஏற்படும்.

6. Diogenes Syndrome
இவர்கள் தங்களையே புறக்கணித்துக் கொள்ளுவார்கள். எப்படி வசதியான வீடு இருந்தாலும் பிச்சைக் காரர்கள் போல வீதியோரத்தில் படுத்துக் கொள்ள நினைக்கும் மனம் கொண்டவர்கள்.

7. Lima Syndrome
ஒருவரைக் கடத்தி வைத்திருக்கும் நபர், தான் கடத்தி வைத்திருக்கும் நபர் மேலேயே அனுதாபப்பட்டு அவர்மேல் அன்பு கொள்வதைக் குறிக்கும்

8. Stockholm Syndrome
தன்னைக் கடத்தி வைத்திருக்கும் அல்லது துன்புறுத்தும் நபர்மேலேயே அன்பு கொள்வதைக் குறிக்கும்.

7.Genitalia Retraction Syndrome
தங்கள் பாலியல் உறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகி சுருங்கிப்  போவதாக நினைக்கும் நிலைமை

10.Exploding Head Syndrome
தங்கள் தலை ஒரு வெடி குண்டு போல வெடித்துச் சிதறுவதாக நினைப்பார்கள். ஆனால் எந்த நோயும் இருப்பதாக உணர மாட்டார்கள்.




மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 



விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்

Contact Form

Name

Email *

Message *