------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

April 25, 2013

மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க








மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க !

Ø  நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள்.

Ø  வேலை முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடாதீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள்.

Ø  இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும் கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

Ø  உங்கள் குடும்பத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

Ø  பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.

Ø  சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களது மனைவி அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.

Ø  உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்துகொள்வானோ, அதே போன்று நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.

Ø  உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்ட மாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்துபோவாள் உங்களவள்.

Ø  மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப்பாருங்கள். அந்தநேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும்.

Ø  மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள்.

Ø  நீங்கள் அவளிடம் ஒரு காதலனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்! அதனால் மனைவியை காதலியுங்கள்...






==--==

Contact Form

Name

Email *

Message *