------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

October 25, 2013

தாழ்வு மனப்பான்மை நீங்க





 தாழ்வு மனப்பான்மை நீங்க ஆலோசனை





கேள்வி:-  எனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, இதை போக்க என்ன வழி ?

மருத்துவர் பதில்:-   பெரும்பாலானவர்கள் தன்னை பற்றி பல தாழ்வான கருத்துக்களை மனதில் ஆழமாக பதியவைத்திருப்பார்கள், இவர்கள் எல்லா விசயங்களிலும் தன்னை பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் தன்னம்பிக்கை இழந்து தன் மனதுடன் சண்டைப்போட்டு தமக்குள் எதிர்மறையான எண்ணகளை ஏற்படுத்தி தாழ்வு மனப்பான்மையை தாங்களகவே உருவாக்கிக்கொள்கிறார்கள்.
          இந்த தாழ்வு மனப்பான்மையானது ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கிறது, இது நம் குழந்தை பருவம் முதல் ஆரம்பிக்கிறது, இது தனது நிறம், அழகு, இனம், படிப்பு, வேலை, அந்தஸ்த்து, மற்றவர்களின் வளர்ச்சி மற்றும் பல்வேறு அங்கக்குறைபாடுகள் பற்றி அதிகமாக நினைத்து கவலை படுபவர்கள் இந்த தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள்.
          இது மற்றவர்கள் நம்மை பார்த்து உன்னால் முடியாது, இதை நீ செய்யாதே என்று சொல்லும் பொழுதும், நமக்கு இதற்கு முன் ஏற்பட்ட சில தோல்வியினை அல்லது சில கசப்பான அனுபவங்களை நாம் எல்லா இடத்திற்க்கும் ஒப்பிட்டு பார்ப்பதாலும் தான் வருகிறது.
          நாம் ஒன்றை ஆசைப்பட்டு அதை அடைய முயற்ச்சி செய்துக்கொண்டிருக்கும் போது அதை மற்றவர்கள் அடைந்து விட்டார்கள் என்றால், நம்மால் முடியவில்லையே என்ற எண்ணம் நமக்குள் மேலோங்கி தாழ்வு மனப்பான்மையை அதிகமாக்குகிறது.

ü  நீங்கள் உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப்பார்த்துக்கொண்டே இருப்பீர்களா?
ü  என்னால் யாருக்கும் எந்த பயனுமில்லை என்று எண்ணுவீர்களா?
ü  எனக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பீர்களா?
ü  உங்கள் நண்பர் நல்ல முன்னேற்றம் கண்டவர்களாக இருந்தால் அவர்களை நெருங்காமல் விலகி செல்கிறீர்களா?
ü  ஒரு கூட்டத்தில் நிற்கவோ அல்லது பேசவோ தயங்குவீர்களா? வெட்கப்படுவீர்களா? படபடப்பாக இருக்குமா?
ü  பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என நினைத்து கொண்டேருப்பீர்களா

இவற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருந்தால் கூட நீங்கள் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
தாமதம் செய்யாது உளவியல் மனநல ஆலோசகரை அனுகி ஆலோசனை பெற்று தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுதலை பெற்று உலகை வெல்பவர்களில் நீங்களும் ஒருவராக ஆகுங்கள்.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்












==--==

Contact Form

Name

Email *

Message *