------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

October 25, 2013

ஓரின சேர்க்கை ஒரு மனநோயா?கேள்வி:- ஓரினச்சேர்க்கை ஒரு மனநோயா?

பதில்:- இரு எதிரெதிர் பாலினத்தவர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படுவது பாலுறவுப் புணர்ச்சி. இதுவே இயற்கையான புணர்ச்சி எனலாம்.

ஆனால், இயற்கைக்கு மாறாக ஒரு ஆண், ஆணுடனோ அல்லது ஒரு பெண் பெண்ணுடனோ பாலுறவு வைத்துக் கொள்வது ஓரினச் சேர்க்கை எனப்படுகிறது.

ஆண்கள் ஓரினச் சேர்க்கையை `ஹோமோ செக்ஸ்' (Homo Sex) என்றும், பெண்களுக்கு இடையேயான ஓரினச் சேர்க்கையை லெஸ்பியன் (Lesbian) என்றும் கூறுகிறோம்.

கிரேக்க மொழியில் ஹோமோ என்றால் ஒரே மாதிரியானவை என்று அர்த்தம். ஓரினச் சேர்க்கையை பல பெயர்களில் அழைத்த போதிலும், ஜெர்மன் உளவியல் நிபுணர் `கார்ல் மரியா பென் கெர்ட்' என்பவர் தான் ஹோமோ செக்ஸ் என முதன்முதலில் பயன்படுத்தினார்.

கிரேக்கத்தில் அடங்கிய லெஸ்போஸ் (Lesbos) தீவில், கி.மு 7ம் நூற்றாண்டில் வசித்த பெண்கள், மற்ற பெண்களுடன் உறவு கொள்வதை வெகுசாதாரணமாகக் கொண்டிருந்தனர்.

இந்த உறவை அப்போது அந்த தீவில் வாழ்ந்த ஸாப்போ என்ற கவிஞர் வர்ணித்து எழுதினார். அன்று முதல் லெஸ்போஸ் தீவு பிரபலமடைந்தது. இதன் அடிப்படையிலேயே லெஸ்பியன் என்ற வார்த்தை உருவானதாகத் தெரிகிறது.

மனிதர்கள் தோன்றிய காலத்திலிருந்தே ஓரினச் சேர்க்கையும் மனித சமூகத்தில் இருந்து வந்திருப்பதை பல்வேறு தகவல்கள் மூலம் அறிகிறோம்.

மிகச் சிறந்த போர் வீரர்களாகத் திகழ்ந்தவர்கள் கூட ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். போரில் தோற்கும் நாடுகளைச் சேர்ந்த போர் வீரர்களை, வெற்றி பெற்ற நாட்டினர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியிருப்பதையும் அறிகிறோம்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வரை, ரோம் நாட்டில் ஓரினச் சேர்க்கையை சமுதாயம் தவறாக நினைக்கவில்லை. இந்த உறவுக்கு சமூக அங்கீகாரமும், சட்டரீதியான அங்கீகாரமும் கூட அளிக்கப்பட்டிருந்ததாம்.

கிறிஸ்து பிறப்புக்குப் பின் 4ஆம் நூற்றாண்டில், ஓரினச் சேர்க்கை
மீதான சமுதாயத்தின் பார்வை மாறத் தொடங்கியது. ஆசனவாய் வழியாக பாலுறவில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணம் வலுப்பெற்றது.

கிறிஸ்தவ மதம் தோன்றி உலகெங்கும் பரவ ஆரம்பித்த பின், குழந்தை பிறக்க எந்தவித வாய்ப்பும் இல்லாத நிலையில் பாலுறவில் ஈடுபடுவது பாவம். அது இயற்கைக்குப் புறம்பானது என்று கூறப்பட்டதுடன் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான பிரசாரம் கிளம்பியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓரினச் சேர்க்கை தவறானது என மருத்துவ உலகமும் தெரிவித்து விட்டதால், அது ஒரு நோய் என்ற தகவல் பரவலாக எழுந்தது. ஓரினச் சேர்க்கை ஒரு மனநோயாகவும் கருதப்பட்டது.

இதுஒருபுறமிருக்க, ஐரோப்பாவை ஆட்டிப்படைத்த நெப்போலியன், 1804-ல் வயதுக்கு வந்த இருவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தவறில்லை என்று சட்டம் போட்டான். இதுவே சரித்திரத்தில் ஓரினச் சேர்க்கை பற்றிய முதல் சட்டம்.

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது? எதனால் அதுபோன்ற மனப்போக்கு ஏற்படுகிறது?


ஓரினச் சேர்க்கை கொள்வோர் மற்றும் இருபாலினத்தவர்களுடன் உறவு கொள்பவர்களுக்கு பல்வேறு விதமான மனநலக் குறைபாடுகளும், தற்கொலை எண்ணமும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆண், பெண்ணுடனோ அல்லது ஒரு பெண், ஆணுடனோ (எதிர்பாலினத்தவருடன்) உறவு கொள்வதையே இயல்பான பாலுறவு என்கிறோம்.

அதுபோன்ற இயல்பான பாலுறவு கொள்பவர்களுடன் ஒப்பிடுகையில், ஓரினச் சேர்க்கை மற்றும் இருபாலுறவு கொள்பவர்களுக்கு அதிக அளவில் மனநோய் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது வாழ்நாளில் குறைந்தபட்சம் மூன்று முறையேனும், தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. என்றாலும், இயல்புக்கு மாறான ஓரினச் சேர்க்கைதான் அவர்களின் அந்த முடிவுக்குக் காரணமா என்பது தெளிவாக்கப்படவில்லை.

ஓரினச் சேர்க்கையால் உருவாகும் நீண்டகால மன அழுத்தமே முக்கியக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக சுதந்திரம் உள்ள நாடுகளில் கூட ஓரினச் சேர்க்கை மற்றும் இருபாலுறவில் ஈடுபடுவோருக்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்புவதால், அவர்களுக்கு மனநல குறைபாடுகளும், தற்கொலை எண்ணமும் தலைதூக்குவதாக உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்

==--==

Contact Form

Name

Email *

Message *