ஒரு பிரபல தொழில் அதிபரைப் பார்த்து
ஒரு இளைஞர். உங்களது வெற்றியின் ரகசியம் என்ன என்று சொல்ல முடியுமா ? என்று கேட்டார் .
தொழிலதிபர் சொன்னார்: ரகசியம் என்று
எதுவுமில்லை வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர் பார்த்து கதவைத் தட்டிக் கொண்டேதான்
இருக்க வேண்டும் .
இளைஞன் கேட்டான்: வாய்ப்பு எப்போது
கிடைக்கும்?
கதவு எப்போது திறக்கும் என்று எப்படி
கண்டுபிடிப்பது ?
தொழில் அதிபர் சொன்னார்: “கண்டுபிடிக்க வழியில்லை;
திறக்கும் வரையில் தட்டிக் கொண்டு
இருப்பதுதான் வழி.”
நீதி: வெற்றியை ஈட்ட இடை விடா முயற்சி இன்றியமையாதது, முயற்சி செய்யுங்கள் வெற்றி உங்கள் வசம்.