Fear & Phobia Counseling Chennai
உளவியல் ஆலோசனை என்றால் என்ன?
- ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய தன்னம்பிக்கையும் வலிமையும் உண்டு. அந்த தன்னம்பிக்கையையும், வலியமையையும் மேலும் அதிகப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் அடிப்படை.
- உளவியல் ஆலோசகர் அறிவுரைகளை வழங்குவதில்லை.
- உளவியல் ஆலோசனை என்பது உளவியல் ஆலோசகருக்கும் ஆலோசனை தேவைப்படும் நபருக்குமிடையே நடக்கும் ஒரு மனமார்ந்த, நட்புடன் கூடிய கலந்துரையாடல் போன்றது.
- உங்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்க தன்னம்பிக்கையுடன் வாழ, உங்கள் பிரச்சனைகளே நீங்களே தீர்த்துக்கொள்ள, வழங்கப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனை / ஆற்றுப்படுத்துதல் ஆகும்..
சுருக்கமாக சொன்னால் உளவியல் ஆலோசகர் உங்களுக்கு மீன் பிடித்து தரமாட்டார், மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பார்
உளவியல் ஆலோசகரின் தகுதி,
- உளவியல் (Psychology), ஆற்றுப்படுத்துதல் & வழிகாட்டுதல் (Counseling & Guidance) சமூகப்பணி (Social Work) , ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் குறைந்தபட்சம் முதுநிலை பட்டம் (Post Graduation) பெற்றிருப்பார் உளவியல் ஆலோசகர்.
- உங்கள் பிரச்சனைகளை வைத்து உங்களை தவறாக எடைபோடாமல், உங்களின் மன ஓட்டங்களை அப்படியே உள்வாங்கி எந்தவித பாராபட்சமின்றி, உங்களுக்கு சரியான வழிகாட்டும் நல்ல மனம் உடையவர்தான் உளவியல் ஆலோசகர்.
- அடிப்படையிலேயே மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள், குறைந்தபட்சம் ஒருத்தரின் நம்பிக்கையாவது பெற்றிருப்பார்கள், ஒருத்தரிடமாவது உண்மையாக இருப்பார்கள். என்ற எண்ணம் கொண்டவர்தான் உளவியல் ஆலோசகர்.
- ஒவ்வொரு தனிமனிதனும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள், தனித்தன்மை உடையவர்கள். ஆகவே ஒவ்வொரு தனிமனிதனின் பிரச்சனைகளும், மற்றவர்களின் பிரச்சனைகளிலிருந்து வேறுபட்டவை.” என உறுதியாக நம்புபவர்தான் உளவியல் ஆலோசகர்.
- தேவைப்படும் போது சில உளவியல் நுட்பங்களை பயன்படுத்தி உங்களின் தனித்தன்மையை மேம்படுத்தவும், உங்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், பின்னால் வரக்கூடிய பிரச்சனைகளை நீங்களே தடுத்துக் கொள்ளும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துபவர்தான் உளவியல் ஆலோசகர்.
நான் ஏன் உளவியல் ஆலோசனை வேண்டும்? பெறாமல் இருந்தால் என்ன ஆகும்?
- உங்களின் பிரச்சனைகள் தொடர்ந்து தீர்க்கப்படாமல் இருந்தால், உங்களுக்கு தெரியாமலேயே பிரச்சனைகள் பெரிதாகலாம், சிக்கலாகலாம். உங்களையும், உங்கள் நேசத்திற்குரியவர்களையும் அது பெரிய வகையில் பாதிக்க வாய்ப்பு உண்டு. உறவுகள் பிரியலாம், வேலையிலிருந்து நீக்கலாம், தொழில் நஷ்டமடையலாம். உங்களுக்கு நீங்களே பிரச்சனையாகலாம்.
உளவியல் ஆலோசனை அனைவருக்கும் தேவையா?
ஒவ்வொரு மனிதனும், வாழ்க்கையின் சவால்களை யாருடைய துணையும் இன்றி தாங்களே தைரியமாக எதிர்கொள்ளும் திறன் உடையவர்கள் என எண்ணினாலும், ஒருசில நேரங்களில் மற்றவரிடம் ஆலோசனை பெறுவது தவிர்க்கமுடியாதது.
உங்களால் முடியாத போது, அதை ஒப்புக்கொண்டு மற்றவரிடம் உதவி கேட்பது என்பது உங்களின் கூடுதல் பலமாகும்.
கீழே உள்ளவற்றில் எது ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு உளவியல் ஆலோசகரின் ஆலோசனை அவசியம் தேவை.
- அளவுக்கு அதிகமான மன உளைச்சலால் தினசரி வாழ்க்கை பாதித்தல்
- எதிர்மறையான, ஏற்றுக்கொள்ள முடியாத, முறையற்ற எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்தல்.
- மன அழுத்தத்துடன் தினசரி வாழ்க்கையை சமாளிக்க முடியாமை
- அலுவலகம், மணவாழ்க்கை, நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள உறவுகளில் பிரச்சனைகள், விரிசல்கள் ஏற்படுதல்.
- படிப்பு, வேலையில், பிரச்சனைகள் மற்றும் குழப்பம் வருதல்,
- தொடர்ந்து மனம் சோர்வடைதல்,
- பயம், கவலை
- தொடர்ந்து நாட்பட்ட தூக்கமின்மை,
- உடல் சோர்வு,அதிக தூக்கத்தால் வேலைத்திறன் பாதிக்கப்படுதல்.
- வாழ்க்கையை வாழ விருப்பமின்மை,
- நீங்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதில் பிரச்சனை ஏற்படுதல்
- விதி, சட்டம், விருப்பம், திறன்கள், நீதி நெறிகளில் குழப்பம் ஏற்படுதல்
- தற்கொலை, சுயமாக காயப்படுத்திக்கொள்ளும் எண்ணங்கள் ஏற்படுதல்
உளவியல் ஆலோசனை எப்படி எனக்கு பலனளிக்கும்
- பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் தண்மை வளரும்,
- பதட்டம்/ மன அழுத்ததை குறைக்கும்
- சிக்கலை தீர்ப்பதற்கு உதவும்
- உறவுகளை சிறப்பாக்கி நட்புடன் வாழ உதவும்
- நம் நடவடிக்கைகளை விழிப்புணர்வுடன் செய்ய முடியும்
- நுன்னறிவை நன்றாக பயன்படுத்த முடியும்.
- பொதுவாக உளவியல் ஆலோசனை பெற்ற பிறகு நீங்கள் புதிய உத்வேகத்துடன், வேறுபட்ட முறையில் சிறப்பாக சிந்தித்தும், சரியான முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும், உங்களின் தினசரி வாழ்வின் பிரச்சனைகள், இழப்புகள், கருத்து வேறுபாடுகளை சரி செய்ய உளவியல் ஆலோசனை உங்களுக்கு உதவும்.
- உளவியல் ஆலோசனைக்கு பிறகு உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை பலவித கண்ணோட்டத்துடன் பார்த்து நீங்களே அந்த பிரச்சனையை தீர்த்துக்கொள்ளும் ஆற்றலை உங்களுக்கு ஏற்படுத்தும்.
உளவியல் ஆலோசனையால் என்ன பயன்?
- மனஅழுத்தங்களை நன்கு குறைக்க முடியும்
- அனைத்து பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க முடியும்
- எந்தொரு பிரச்சினையையும் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.
- என்னுடைய முயற்சிகள் பிரச்சனையை தீர்க்க உதவவில்லை; ஆகவே உளவியல் ஆலோசனை உதவி பெற்று என் பிரச்சனைகளை தீர்க்க நான் இங்கு மனம் விரும்பி வந்துள்ளேன். இங்கு கிடைக்கும் ஆலோசனைகளை நிச்சயமாக கடைபிடிக்க முயற்சி செய்வேன். அந்த முயற்சியில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால், தயங்காமல் மீண்டும் மீண்டும் உளவியல் ஆலோசனை பெறுவேன்” என்று எண்ணி, விடா முயற்ச்சியுடன் வருபவர்கள் நல்ல பலன்களையும் முன்னேற்றத்தையும் பெற முடியும்.
உளவியல் ஆலோசகர் இரகசியங்களை பாதுகாப்பாரா?
- உளவியல் ஆலோசனை என்பது ‘தானே விரும்பி ஆலோசனை பெற வருபவருக்கே’ அளிக்கப்படும் ஆலோசனை ஆகும். நீங்கள் சொல்லும் அனைத்து விஷயங்களும் இரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்.
- தனி நபர் விவரங்கள் யாருக்கும் தெரியப்படுத்தப்பட மாட்டாது.
- உங்களின் கலாச்சாரம், சமூகம், குடும்ப நிலை, வருமானம், வேலை, ஆகிவற்றை மனதில் வைத்து உளவியல் ஆலோசனை வழங்கப்படும்.
- உங்களுக்கும், உளவியல் ஆலோசகருக்கும் உள்ள உறவு, தொழில் முறை உறவு மட்டுமே. வயது, பால், கலாச்சாரம், உடல் ஊனம், சாதி, சமயம், பாலுறவு முறை போன்ற எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக கருதப்படுவார்கள்.
- உங்களுக்கு உதவ வேண்டிய அளவுக்கு தனக்கு திறன்கள் இல்லையென்று ஒரு உளவியல் ஆலோசகர் கருதினால், உங்களுக்கு சரியாக உதவக்கூடிய வேறு ஒரு ஆலோசகரை, மனநல மருத்துவரை உங்களுக்கு பரிந்துரைப்பார்.
உளவியல் ஆலோசனை பிரிவுகள்
Ø பொது உளவியல் ஆலோசனை - General Psychology
Ø கல்வி ஆலோசனை - Educational Psychology
Ø தொழில் ஆலோசனை - Occupational Psychology
Ø திருமண வாழ்க்கை தொடர்பான ஆலோசனை - Pre Marital & Post Marital Counseling,
Ø குடும்ப பிரச்சினைகளுக்கான ஆலோசனை – Family Problems Counseling,
Ø புற்று நோயாளிகளுக்கான ஆலோசனை – Cancer Patients Supportive Counseling,
Ø தீவிர நோயாளிகளுக்கான ஆலோசனை – Bed Ridden patients Supportive Counseling,
உளவியல் ஆலோசகர் என்பவர், நண்பர்கள், நலம் விரும்பிகளைவிட மேலானவரா?
- உங்களின் நண்பர்களும், நலன்விரும்பிகளும் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கிய நபர்கள்.அவர்கள்தான் உங்களின் முதல் ஆலோசகர்கள். அவர்களுடன் பேசுவது உங்கள் பிரச்சனைகளை தீர்க்கவும், வாழ்வை மேம்படுத்தவும் உதவ முடியும்,
- இருந்தபோதும் அவர்களிடம் சில பிரச்சனைகள் இருக்கின்றன. அவர்களால் உங்கள் பிரச்சனைகளை நடுநிலையுடன் பார்க்க முடியாமல் போகலாம். உங்களை வெகு காலமாக அவர்களுக்கு தெரியும் என்பதால், நீங்கள் இப்படிப்பட்டவர்தான் என்பது போன்ற அசைக்க முடியா எண்ணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். எனவே அவர்களின் சொந்தக்கருத்துக்களை, அனுபவங்களை உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வாக சொல்ல வாய்ப்பு அதிகம்.
- உளவியல் ஆலோசகர், உங்களையும் உங்கள் பிரச்சனைகளையும் உளவியல் ரீதியான, நிரூபிக்கப்பட்ட உளவியல் அறிவியல் உண்மைகளை அடிப்படையாய் வைத்து நடுநிலையுடன் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார். மேலும் உங்களின் தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தை பாதுகாப்பார்.
உளவியல் ஆலோசகர் என்பவர் மனதில் ஏற்படும் சஞ்சலங்கள், சலனங்களை, தினசரி பிரச்சனைகளை தீர்க்க உதவுபவர்.
உளவியல் ஆலோசகர் என்பவர் உங்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து, உங்களை தெளிவாக சிந்திக்க தடுக்கும் காரணத்தை கண்டுபிடித்து. அந்த குறிப்பிட்ட காரணத்தை நீக்க, உங்களுடனோ, தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களுடனும் செர்ந்து, உங்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்ற உளவியல் ரீதியான தீர்வுகளை வழங்கி உதவுபவர்.
மனச்சிதைவு, மனச்சோர்வு, மது, புகை, போதை அடிமைப்பழக்கங்கள் போன்ற சில மன பிரச்சனைகளுக்கு மனநல மருத்துவரும், உளவியல் ஆலோசகரும் இணைந்து சிகிச்சையும் அளிப்பார்கள்.
உளவியல் ஆலோசனையின் நன்மைகள்
ஒரு சில சந்தரப்பங்களில் தனது பிரச்சினையை நம்பிக்கையான ஒருவரிடம் கூறினால் மனதுக்கு நிம்மதியாகவும் பாரம் குறைந்த மாதிரியும் இருக்கும்.
பிரச்சினையை தீர்த்த பிறகு மனதுக்கு ஆறுதல் கிடைக்கும். அத்துடன் மனோ சக்தியை வலுப்படுத்திக்கொள்வதன் மூலம் ஆளுமைத்தன்மையை வளர்த்துக்கொள்ளலாம்
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் உளவியல் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – தாழ்வுமனப்பாண்மை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.