மாற்று வழிப் பாலியல் சந்தோஷங்கள் ( sexual deviation)
பொதுவான பாலியல் இன்பம் பெறும் முறைகள்
- ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (heterosexuals),
- ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் பெண்ணும் உறவு கொள்ளுதல் (homo sex அல்லது Lesbianism)
- சுய இன்பம்(masturbation) பெறுதல்.
ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்ளுவதன் மூலம் பாலியல் திருப்தி அடைய நினைப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும் . அவ்வாறு அல்லாமல் வேறு முறைகள் மூலம் பாலியல் இன்பம் பெற நினைப்பது மாற்று வழிப் பாலியல் முறை (sexual deviation) எனப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சில வேளை அது ஒரு மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். சில முறைகள் பாதிப்பு அற்றவை. உதாரணத்திற்கு சுய இன்பம் என்பது பாதிப்பு அற்ற ஒரு மாற்று வழி பாலியல் சந்தோஷம் நாடும் முறையாகும்.
இவற்றிற்கு அப்பாலும் மனிதர்களின் மனதிலே வித்தியாசமான பாலியல் சந்தோசம் முறைகள் ஏற்படலாம். இவற்றிலே சில பயங்கரமானவை சில சாதாரண மனிதர்களாலே நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை.இவை பற்றி அறிந்து கொள்வது இப்படி வித்தியாச மனநிலை கொண்டவர்களிடம் இருந்து தங்களைப் பாது காத்துக் கொள்ளவும் , இப்படிப் பட்டவர்களை இனங்கண்டு தகுந்த தீர்வை வழங்குவதற்கும் அவசியமாகும்.
இனி இப்படி மாற்று வழி பாலியல் முறை தேடும் நபர்களின் மாறுபட்ட முறைகள் பற்றி பார்ப்போம்!
ஒரே பால் உறவு -Homosex
ஆணும் ஆணும் உறவில் ஈடுபடல்
பெண்ணும் பெண்ணும் உறவில் ஈடுபடல்
நேர் இரத்த உறவு முறையான பாலியல் தொடர்பு – Incest.
அப்பா மகள் இடையே, அம்மா மகன் இடையே, அண்னன் தங்கை, அக்கா தம்பி,இடையே , சித்தப்பா மாமா மருமகள் போன்ற நேர் இரத்த சொந்தங்களால் ஏற்படும் பாலியல் உறவுகள்.
சிறு குழந்தைகளோடு உறவு கொள்ளுதல் -Paedophilia
சின்ன குழந்தைகலோடே உறவு வைக்க விருப்பம் கொண்ட கொடுமையான மனநிலை கொண்டவர்கள். .இப்படியானவர்கள் உங்களுக்குத் தெரிந்தால் உடனே மனநல வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்க.
நிர்வாண வெளிக்காட்டல் முறை -Exhibitionism
இவர்கள் திடீரென பெண்கள் முன் அல்லது மக்கள் கூட்டங்களிடையே தன் உடைகளை களைந்து நிர்வாணம் ஆக நிற்பதன் மூலம் தங்களை திருப்தி படுத்திக் கொள்வார்கள். நிறைய பெண்கள் இந்த சந்தர்ப்பத்தை சந்தித்து இருப்பார்கள். இவ்வாறு செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே ! இவர்களுக்கு நிச்சயமாக ஒரு மன நல ஆலோசகரின் ஆலோசனை தேவை.
பிணத்தோடு உறவு கொள்ளுதல் - Necrophilia
இது மிகவும் கொடுமையான ஒன்று பிணங்களோடு உறவு கொள்ளுதல். இது மிகவும் குறைவு என்றாலும் பிரேத அறையில் வேலை செய்பவர்கள் இவ்வாறு பாதிக்கப் பட சந்தர்ப்பம் உள்ளது. சில பேர் உயிரோடு ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு போய், அவளை கொலை செய்த பின் உறவை வைத்துக் கொள்வார்கள்.இவர்கள் நிச்சயமாக மன நல மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கவேண்டும்..
திருட்டுத் தனமாய் ரசிக்கும் முறை (Voyeurism )
இவர்கள் மற்ற பாலினத்தவரை மறைவாக நின்று நிர்வாணமாக ரசிப்பதே அவர்களின் இன்பம். இவர்கள் எப்போதும் மறைவாக ரசிப்பதையே விரும்புவார்கள்,
மாற்று பாலினத்தவரின் ஆடைகள் மூலம் சந்தோசம் அடைபவர்கள் (Transvestism)
இவர்கள் மற்ற பாலினத்தவரின் உடைகளை அணிவதிலேயே திருப்தி கொள்வார்கள். மற்ற பாலினத்தவரின் ஆடைகளை வாங்கியோ, திருடியோ அதை அணிந்து கொண்டு மகிழ்வார்கள்.
Masochism
இவர்கள் தன்னை தானே வருத்தி இன்பம் பெறுவார்கள்
Sadism
இவர்கள் மற்றவர்களை வருத்தி இன்பம் பெறுவார்கள்
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்
---